Map Graph

மாதவரம் நெடுஞ்சாலை

மாதவரம் நெடுஞ்சாலை என்பது தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் பெரம்பூர் புறநகர்ப் பகுதியில் எப்போதும் கூட்டமாகக் காணப்படும் ஒரு நெடுஞ்சாலை ஆகும். சென்னை மாநகரின் முக்கியமான வியாபார மையங்களில் இச்சாலைப் பகுதியும் ஒன்றாகும். இச்சாலையில், முக்கியமான தொழிற்சாலைகள் நிறைந்த 'அமால்கமேசன் குழும' தொழிற்தோட்டம், ஜவுளி வியாபார நிறுவனங்கள், எரிபொருள் விற்பனை நிலையங்கள், உணவுக் கூடங்கள், மின்னணு உபகரண கடைகள், பல்பொருள் அங்காடிகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகங்கள், திரையரங்க வளாகம், 'இண்டேன்' வாயு முகமை, செல்பேசி சேவை மையங்கள், தங்க நகைக் கடைகள், பூ வியாபாரிகள், பழ விற்பனையாளர்கள், தேநீர் விடுதிகள், வங்கிகள், இருசக்கர வாகன விற்பனையகம் ஆகிய தொழில் சார்ந்தோர் உண்டு.

Read article